மக்கள் நீதி மய்யம் விருகம்பாக்கம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விருகம்பாக்கம் மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை எம்.ஜி.ஆர் நகர், சூலைப்பள்ளம் பிரதான சாலையில் உள்ள அஞ்சலி மஹாலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் திரு. த.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இதில், 40 பெண்கள் மற்றும் 5 திருநங்கைகள் கட்சியில் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மாவட்டச் செயலாளர்கள் திரு. கதிர் (சைதாப்பேட்டை), திரு. பாலமுருகன் (வேளச்சேரி) ஆகியோர் உரையாற்றினர். இதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு. சக்கரவர்த்தி, திரு. பாலகிருஷ்ணன், திருமதி. விஜி, மாவட்ட அமைப்பாளர்கள் திரு. பிரான்சிஸ் (சமூக ஊடக அணி), திரு. பிரசாத்குமார் (ஆதிதிராவிடர் நல அணி), திரு. சுரேஷ் (விவசாய அணி), நற்பணி அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. ஸ்ரீதர், நகரச் செயலாளர்கள் திரு.சரவணண், திரு. புருஷோத்தமன், திரு. அலெக்ஸ், திரு. செந்தில்குமார், வட்டச் செயலாளர்கள் திரு.ராஜ், திரு. ஜேம்ஸ், திரு. சுப்பிரமணியன், திரு. செந்தில்குமார், திரு. வெங்கடேஷ், திரு. கணேஷ், திரு. பாலராமன், திரு. கண்ணன், திரு. விக்ரம், திரு. கார்த்திக், திரு. ஆறுமுகம், கிளைச் செயலாளர்கள் திரு. யோகேஷ், திருமதி. வனிதா, திருமதி. செல்வி, திரு. பெருமாள், திரு. பாலமுருகன், திரு. சுந்தரேசன், திரு. மாரியப்பன், திரு. சுதாகர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1917464532928115025
Facebook: https://www.facebook.com/share/p/1Bwq2gvjMJ/
Instagram: https://www.instagram.com/p/DJD4BNIpogo/?utm_source=ig_web_copy_link